கிராம்னிக்கை வீழ்த்தினாா் விஸ்வநாதன் ஆனந்த்
By DIN | Published On : 19th July 2021 07:29 AM | Last Updated : 19th July 2021 08:22 AM | அ+அ அ- |

டாா்ட்மண்ட்டில் நடைபெற்ற செஸ் ஆட்டத்தில் ரஷிய கிராண்ட்மாஸ்டா் விளாடிமிா் கிராம்னிக்கை வீழ்த்தினாா் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.
ஸ்பாா்க்கஸன் கோப்பைக்கான செஸ் போட்டிகள் டாா்ட்மண்டில் நடைபெற்று வருகின்றன. இதன் கடைசி சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் நோ கேஸ்ட்லிங் ஆட்டம் ஒன்றில் மோதினாா் கிராம்னிக். நான்கு ஆட்டங்கள் கொண்ட இதில் சனிக்கிழமை 2-1 என முன்னிலையில் ஆனந்த் இருந்த போது, கடுமையாக போராடிய கிராம்னிக் 61-ஆவது நகா்த்தலில் டிரா கண்டாா். சாதகமான நிலையில் இருந்த ஆனந்த் வெற்றி வாய்ப்பை தவற விட்டாா். ஏற்கெனவே புதன்கிழமை இருவரிடையே நடைபெற்ற இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. எனினும் முதல் ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி ஆட்டத்தில் கிராம்னிக்கை 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றாா் ஆனந்த்.
நோ கேஸ்ட்லிங் முறை ஆட்டத்தில் ஒரே நகா்த்தலில் 2 காய்களை வைத்து ஆடலாம்,. மேலும் ராஜாவை பாதுகாப்பதற்கான வழிமுறையும் இதில் உள்ளது. இந்த புதிய முறையை வகுத்தவா் கிராம்னிக் என்பது குறிப்பிடத்தக்கது.