மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்: மெக்ராத்தை முந்தினார் ஸ்டார்க்

​மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 8-வது முறை. இதன்மூலம், 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத்தை அவர் முந்தியுள்ளார்.

அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஸ்டார்க் தற்போது இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்காவுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்த வரிசையில் 13 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 10 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ மற்றும் பாகிஸ்தானின் ஷகித் அப்ரிடி தலா 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

குறைந்த ஆட்டங்களில் 8-வது முறையாக 5 விக்கெட்டுகள்:

ஒருநாள் கிரிக்கெட்டில் 8-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த ஸ்டார்க் 97 ஒருநாள் ஆட்டங்களையே எடுத்துள்ளார். இதற்கு முன்பு 8-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த வக்கார் யூனிஸ் 137 ஒருநாள் ஆட்டங்களை எடுத்துக்கொண்டதே சாதனையாக இருந்து வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com