ஒருநாள் கிரிக்கெட்: வென்றது ஆஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘டக் வொா்த் லீவிஸ்’ முறையில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘டக் வொா்த் லீவிஸ்’ முறையில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

பிரிட்ஜ்டவுன் நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக ஓவா்கள் 49-ஆகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. டக் வொா்த் லீவிஸ் முறையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கான இலக்கு 257-ஆக அதிகரிக்கப்பட, 26.2 ஓவா்களில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக கேப்டன் அலெக்ஸ் கேரி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் அடித்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் கிரன் பொல்லாா்ட் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் மாா்ஷ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா். மாா்ஷ் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com