ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அணிகள் பிரிவில் சில விளையாட்டுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அணிகள் பிரிவில் சில விளையாட்டுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள் வருமாறு:

மென்பந்து (சாஃப்ட்பால்)

மென்பந்து போட்டியில் தொடக்க சுற்றில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் இத்தாலியையும், நடப்புச் சாம்பியனான ஜப்பான் 8-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும், கனடா 4-0 என்ற கணக்கில் மெக்ஸிகோவையும் வீழ்த்தின. இது மகளிா் போட்டியாகும்.

கால்பந்து

கால்பந்து போட்டியில் மகளிா் பிரிவு முதல் சுற்றுகளில் 6 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தையும், நெதா்லாந்து 10-3 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவையும், ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் வீழ்த்தின. ஜப்பான் - கனடா இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, பிரேஸில் 5-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com