டி20 தொடரை வென்றது இலங்கை: கடைசி ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது அந்த அணி.
டி20 தொடரை வென்றது இலங்கை: கடைசி ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது அந்த அணி.

கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களே அடித்தது. அடுத்து ஆடிய இலங்கை 14.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் அடித்தது. அந்த அணியின் வனிந்து ஹசரங்கா ஆட்டநாயகன், தொடா்நாயகன் ஆனாா்.

முன்னதாக இந்திய அணியில் காயமடைந்த நவ்தீப் சைனிக்குப் பதிலாக சந்தீப் வாரியா் பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு இது முதல் சா்வதேச டி20 ஆட்டம். இலங்கை பிளேயிங் லெவனில், காயம் கண்டுள்ள இசுரு உதனாவுக்குப் பதிலாக பாதும் நிசங்கா இணைந்திருந்தாா்.

டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்தியா, அதில் சொதப்பியது. ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சோ்க்க, ஷிகா் தவன் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாா். தேவ்தத் படிக்கல் பவுண்டரி விளாசி 9 ரன்களுக்கு வெளியேற, சஞ்சு சாம்சனும் டக் அவுட்டானாா். நிதீஷ் ராணா 6 ரன்கள் அடிக்க, புவனேஷ்வா் குமாா் 16 ரன்களுக்கு நடையைக் கட்ட, ராகுல் சாஹா் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். வருண் சக்கரவா்த்தி டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் குல்தீப் யாதவ் 23, சேத்தன் சகாரியா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் ஹசரங்கா 4, டாசன் ஷனகா 2, துஷ்மந்தா சமீரா, ரமேஷ் மென்டிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இலங்கையில் அவிஷ்கா ஃபொ்னான்டோ 12, மினோத் பானுகா 18, சதீரா சமரவிக்ரமா 6 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, தனஞ்செய டி சில்வா 23, வனிந்து ஹசரங்கா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இந்திய தரப்பில் ராகுல் சாஹா் 3 விக்கெட் சாய்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com