வீகன் உணவுமுறையைப் பின்பற்றவில்லை: விராட் கோலி விளக்கம்

வீகன் உணவுமுறையைப் பின்பற்றுவதாக நான் எங்கும் கூறவில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன் என்றே...
வீகன் உணவுமுறையைப் பின்பற்றவில்லை: விராட் கோலி விளக்கம்

வீகன் உணவுமுறையைப் பின்பற்றவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

ரசிகர்களுடனான சமீபத்திய உரையாடலில் தான் தினமும் முட்டைகள் சாப்பிடுவதாக தெரிவித்தார் கோலி. வீகன் உணவுமுறையை விராட் கோலி பின்பற்றி வருவதாக எண்ணிய ரசிகர்கள் இந்தப் பதிலைக் கண்டு ஆச்சர்யமடைந்தார்கள். இதை விமர்சித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள். 

சைவ உணவுப் பழக்கத்துடன் பால் பொருள்களான பனீர், தயிர், சீஸ், நெய் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவுமுறையை வீகன் என அழைப்பார்கள். தமிழில் நனி சைவம் என்பார்கள். மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் இந்தப் பூமியில் வாழ உரிமை உண்டு என்பதை வலியுறுத்தவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் பலரும் வீகன் உணவுமுறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு விராட் கோலி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

வீகன் உணவுமுறையைப் பின்பற்றுவதாக நான் எங்கும் கூறவில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன் என்றே கூறி வருகிறேன். உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் சைவ உணவுகளை உண்ணுங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com