மூன்று புதுமுகங்களுடன் இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கியது

இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் நியூசிலாந்து அணி இரு ஆல்ரவுண்டர்களுடனும்...
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் பிரேசி, ஒலி ராபின்சன் மற்றும் நியூசிலாந்து அணியில் டேவோன் கான்வே என மூன்று வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார்கள். இங்கிலாந்து அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் நியூசிலாந்து அணி இரு ஆல்ரவுண்டர்களுடனும் களமிறங்கியுள்ளன. இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்குகிறார்கள்.

தனது 161-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரரான குக்கின் சாதனையைச் சமன் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com