உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வில்லியம்சன் விளையாடுவாரா?

இங்கிலாந்துடனான 2-வது டெஸ்டில் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவது குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். நீண்ட நாள்களாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் வில்லியம்சன் தற்போது இங்கிலாந்து டெஸ்டிலிருந்தும் விலகியிருப்பது இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவர் பங்கேற்பது குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வில்லியம்சனின் காயம் குறித்த அறிவிப்பில் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருப்பது:

"வில்லியம்சனை இழப்பது எளிதான முடிவல்ல. ஆனால், அதுதான் சரியான முடிவு. சௌதாம்ப்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ள அந்த ஆட்டத்துக்கு முன் அவர் முழு உடற்தகுதி அடைவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com