பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் மோதும் நடால் - ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பிரபல வீரர்களான நடாலும் ஜோகோவிச்சும் மோதவுள்ளார்கள்.
ஜோகோவிச்
ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பிரபல வீரர்களான நடாலும் ஜோகோவிச்சும் மோதவுள்ளார்கள்.

உலகின் நெ. 1 வீரரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை  6-3, 6-2, 6-7(5), 7-5 எனத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 28 நிமிடங்களுக்கு நடைபெற்றது.

மற்றொரு காலிறுதிச்சுற்றில் 13 முறை பிரெஞ்சு ஓபன் போட்டியை வென்ற நடால், ஆர்ஜெண்டினாவின் டியகோவை 6-3, 4-6, 6-4, 6-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் நடாலும் ஜோகோவிச்சும் மோதினார்கள். இருவரும் இதுவரை மோதிய ஆட்டங்களில் ஜோகோவிச் 29 ஆட்டங்களிலும் நடால் 28 ஆட்டங்களிலும் வென்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com