மே.இ. தீவுகள், வங்கதேச பயணம்: ஆஸ்திரேலியாவில் 7 முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 7 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்பட 7 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. 

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதன்பிறகு வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் என 7 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

அணி விவரம்:

ஆரோன் பின்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகார், வெஸ் அகார், ஜேசன் பெரன்டோர்ப், அலெக்ஸ் கேரி, டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மோய்சஸ் ஹென்ரிகஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மோட், ரைலே மெரெடித், ஜோஷ் பிலிப்பி, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரு டை, மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com