டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் 8 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது.
மன்ப்ரீத் சிங் (இடது)
மன்ப்ரீத் சிங் (இடது)

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் 8 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது. எனினும் கடந்த 41 வருடங்களாக இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது இந்திய அணி. அந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய ஹாக்கி அணி

மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், ருபிந்தர் பால் சிங், சுரேந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹார்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, சுமித், ஷம்ஷெர் சிங், தில்ப்ரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார், மன்தீப் சிங், 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com