விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து நடால் விலகல்

இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிரபல வீரர் நடால் அறிவித்துள்ளார்.
விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து நடால் விலகல்

இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிரபல வீரர் நடால் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆட்ட முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் நடால். இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

விம்பிள்டன் போட்டி ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 அன்று தொடங்குகிறது.

என்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னுடைய குழுவினருடன் ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று இதுபற்றி நடால் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com