ஜடேஜாவைத் தேர்வு செய்த இந்திய அணி: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

சுழற்பந்துவீச்சுக்காக அல்ல, பேட்டிங்குக்காக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளார்கள்...
ஜடேஜாவைத் தேர்வு செய்த இந்திய அணி: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஜடேஜாவைத் தேர்வு செய்தது தவறான முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஜடேஜாவைத் தேர்வு செய்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வானிலை மாற்றம் காரணமாக இரு சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்தது விவாதத்துக்குரிய முடிவாகும். அவருடைய சுழற்பந்துவீச்சுக்காக அல்ல, பேட்டிங்குக்காக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளார்கள். பேட்டிங்குக்காக ஜடேஜாவைத் தேர்வு செய்யும் முடிவை நான் எப்போதும் எதிர்த்து வருகிறேன்.

சிறப்புத் தகுதி கொண்ட வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்திருந்தால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்தது சரியான முடிவாக இருந்திருக்கும். ஆனால் ஜடேஜாவை அவருடைய பேட்டிங் திறமைக்காகத் தேர்வு செய்துள்ளார்கள். இது பெரும்பாலும் விளைவுகளையே உண்டாக்கும். விஹாரியைத் தேர்வு செய்திருந்தால் இந்திய அணிக்குக் கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும். 170 ரன்கள் என்பது 220 அல்லது 230 ரன்களாக மாறியிருக்கலாம்.

கூடுதல் திறமை உள்ளதற்காக ஒருவரைத் தேர்வு செய்வதை இனிமேலும் இந்தியா செய்யாது என நினைக்கிறேன். முக்கியமான ஆட்டங்களில் இந்தக் கூடுதல் திறமை எப்போதாவதுதான் பயன் தரும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com