தி ஹன்ட்ரட் போட்டி: மேக்ஸ்வெல் விலகல்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து ஆஸி. வீரர்கள் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு அடுத்ததாக....
தி ஹன்ட்ரட் போட்டி: மேக்ஸ்வெல் விலகல்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து ஆஸி. வீரர்கள் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு அடுத்ததாக மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளார். 

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்கிறது. இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இவ்வகையான கிரிக்கெட் போட்டிக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன.

ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டியைக் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வருட தி ஹன்ட்ரட் போட்டி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சதர்ன் பிரேவ் அணிக்குத் தேர்வான ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தி ஹன்ட்ரட் போட்டியிலிருந்து விலகினார்கள். இதையடுத்து மற்றொரு பிரபல ஆஸி. வீரரான மேக்ஸ்வெல்லும் விலகியுள்ளார். அவர், லண்டன் ஸ்பிரிட் அணியில் இடம்பெற்றிருந்தார். இத்தகவலை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெலுக்குப் பதிலாக மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் இங்க்லிஷ், லண்டன் ஸ்பிரிட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com