ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ஸ்ரீஜேஷ், தீபிகா பெயர்களைப் பரிந்துரைத்த ஹாக்கி இந்தியா

கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகிய...
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ஸ்ரீஜேஷ், தீபிகா பெயர்களைப் பரிந்துரைத்த ஹாக்கி இந்தியா

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகிய இருவரின் பெயரையும் ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.  இதன்படி 2017 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீராங்கனை தீபிகா ஆகிய இருவரின் பெயரையும் ஹாக்கி இந்தியா பரிந்துரைத்துள்ளது. 2015-ல் அர்ஜுனா விருதும் 2017-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் ஸ்ரீஜேஷ். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் விளையாடினார் தீபிகா. இதுதவிர ஹர்மன்ப்ரீத் சிங், வந்தனா, நவ்ஜோத் கெளர் ஆகியோர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்ட ஐந்து பேருக்குக் கடந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com