மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறாது என பிசிசிஐ முடிவு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ தரப்பில்...
மும்பையில் ஐபிஎல்  ஆட்டங்கள் நடைபெறாது என பிசிசிஐ முடிவு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது.  

ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐபிஎல் ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.

இதையடுத்து ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களை மும்பையில் நடத்துவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு அன்று மஹாராஷ்டிரத்தில் 4,478 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

தற்போதைய சூழலில் சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளன. என்ன காரணங்களுக்காக மொஹலி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தவில்லை என்று பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com