விஜய் ஹசாரே போட்டி: தமிழக அணி வெளியேறியது ஏன்?

விஜய் ஹசாரே போட்டியிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக அணி, காலிறுதிக்குத் தகுதி பெறாமல்...
விஜய் ஹசாரே போட்டி: தமிழக அணி வெளியேறியது ஏன்?

விஜய் ஹசாரே போட்டியில் குறைவாகப் புள்ளிகள் பெற்றதால் தமிழக அணி காலிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பையை வென்றிருந்தது.

இதனால் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியிலும் தமிழக அணி நன்றாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அணி தற்போது காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழக அணி, 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்தது. எனினும் 12 புள்ளிகளுடன் இருந்த ஆந்திர அணி, ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்த நிலையில் - மும்பை, செளராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத், ஆந்திரம், கர்நாடகா ஆகிய 7 அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு எலைட் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடம் பிடித்த தில்லியும் பிளேட் பிரிவில் முதலிடம் பிடித்த உத்தரகண்ட்டும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, 8-வது அணியாகக் காலிறுதிக்குத் தகுதி பெறும்.

இந்தமுறை 5 எலைட் பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டன. மற்றும் தனியாக பிளேட் பிரிவும் இருந்தது. 5 எலைட் பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பெற்ற குஜராத், ஆந்திரம், கர்நாடகா, மும்பை, செளராஷ்டிரம் ஆகிய 5 அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன. 5 எலைட் பிரிவுகளிலும் அதிகப் புள்ளிகள் பெற்ற மீதமுள்ள இரு அணிகளும் காலிறுதிக்குத் தேர்வாகின. அதன்படி குரூப் சி பிரிவில் இருந்த உத்தரப் பிரதேசமும் கேரளாவும் 16 புள்ளிகளுடன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 

இதையடுத்து 8-ம் அணியைத் தேர்வு செய்ய எலைட் பிரிவில் புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 8-ம் இடம் பிடித்த தில்லியும் பிளேட் பிரிவில் முதலிடம் பிடித்த உத்தரகண்ட்டும் மோதவுள்ளன. 

எலைட் பிரிவில் 16 புள்ளிகள் அதாவது 4 வெற்றிகள் பெற்றால் மட்டுமே காலிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும். பரோடா அணி 16 புள்ளிகள் பெற்றும் ரன்ரேட் குறைவாக இருந்தால் அதனால் கடைசி இடத்துக்குக் கூட போட்டியிட முடியவில்லை. 

ஆனால் குரூப் பிரிவில் உள்ள தமிழகமும் ஆந்திரமும் 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளே பெற்றன. தமிழகத்தை விடவும் அதிக ரன்ரேட் கொண்டிருந்ததால் ஆந்திரத்தால் காலிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது. ரன்ரேட் குறைவாக இருந்தால் தமிழக அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

விஜய் ஹசாரே போட்டியிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக அணி, காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com