ஆறு விக்கெட்டுகள் எடுத்த அகர்: டி20யில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களில் தோற்றபோதும் அபாரமாக விளையாடி 3-வது டி20 ஆட்டத்தை...
ஆறு விக்கெட்டுகள் எடுத்த அகர்: டி20யில் நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு டி20 ஆட்டங்களில் தோற்றபோதும் அபாரமாக விளையாடி 3-வது டி20 ஆட்டத்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கேப்டன் ஃபிஞ்ச் 69 ரன்களும் ஜோஷ் பிலிப் 43 ரன்களும் எடுத்தார்கள்.

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி, 17.1 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்டின் கப்தில் 43 ரன்களும் கான்வே 38 ரன்களும் எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகர், 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.

4-வது டி20 ஆட்டம் மார்ச் 5 அன்று நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com