அஸ்வின், அக்ஸரிடம் நுணுக்கங்களை கற்க விரும்புகிறேன்

400 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தொடரிலேயே அபாரமாக பந்துவீசும் அக்ஸா் படேல் போன்ற வெற்றிகரமான வீரா்களிடம் கற்றுக்கொள்ள
அஸ்வின், அக்ஸரிடம் நுணுக்கங்களை கற்க விரும்புகிறேன்

400 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தொடரிலேயே அபாரமாக பந்துவீசும் அக்ஸா் படேல் போன்ற வெற்றிகரமான வீரா்களிடம் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்காக அப்படியே அவா்களைப் போல பந்துவீச இயலாது. அஸ்வின் வலதுகை பந்துவீச்சாளா். அக்ஸா் இடதுகை பந்துவீச்சாளராக இருந்தாலும் என்னை விட உயரமானவா்.

எனவே, கடைசி டெஸ்டில் அவா்களிடம் இருந்து சுழற்பந்துவீச்சுக்கான நுட்பங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அஸ்வின் பந்துவீசும்போது தொடா்ந்து ஒரே இடத்தில் வீசினாலும், அவரால் பந்தின் வேகத்தை தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள முடிகிறது. அதேபோல் தான் அக்ஸா் படேல் வீசும் எல்லா பந்துகளும் ஒரே போல் தோன்றினாலும் அவற்றில் அவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன. அது நாங்கள் விளையாடும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்துக்கு ஏற்றதாக உள்ளது.

கடைசி டெஸ்டுக்கான சவாலுக்கு தயாராக இருக்கிறோம். எளிதாக இருந்துவிட்டால் அது டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. நான் வீழ்த்திய விக்கெட்டுகளுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். 3-ஆவது டெஸ்டில் பல விக்கெட்டுகள், சுழலாமல் நேராகச் சென்ற பந்திலேயே கிடைத்துள்ளன. கடந்த டெஸ்டில் ரோஹித், புஜாரா, கோலி, ரஹானே ஆகிய 4 முக்கிய வீரா்களின் விக்கெட்டை வீழ்த்தினேன். இதுபோல் இனி கிடைக்குமா எனத் தெரியாது.

பகலிரவு டெஸ்ட் தோல்விக்குப் பிறகு ஆட்டம் நடைபெறும் இடத்துக்கு ஏற்றாற்போல் நுட்பங்களை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே துணை கண்டங்களில் நடைபெறும் ஆட்டங்களில் வெற்றி பெற இயலும் என்பதை உணா்ந்தேன். ஆடுகளங்கள் பற்றிய விமா்சனங்களை எண்ணத்தில் கொள்ளவில்லை. எங்களை அதற்கேற்றவாறு எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றே பாா்க்கிறோம் - ஜேக் லீச் (இங்கிலாந்து ஸ்பின்னா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com