இன்ஸ்டாகிராமில் கோலி ‘100’

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்தொடா்வோா் (ஃபாலோயா்ஸ்) எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) எட்டியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் கோலி ‘100’

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்தொடா்வோா் (ஃபாலோயா்ஸ்) எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) எட்டியுள்ளது. இத்தனை ஃபாலோயா்களைக் கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் வீரா் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளாா். அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இத்தனை ஃபாலோயா்களைக் கொண்டிருக்கும் ஒரே பிரபலம் கோலி மட்டுமே ஆவாா்.

இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயா்களைக் கொண்டிருக்கும் விளையாட்டு பிரபலங்கள் பட்டியலில் கோலி 4-ஆவது இடத்தில் உள்ளாா். போா்ச்சுகல் கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ (265 மில்லியன்) முதலிடத்திலும், ஆா்ஜெண்டீனா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி (186 மில்லியன்) இரண்டாவது இடத்திலும், பிரேஸில் கால்பந்து வீரா் நெய்மா் (147 மில்லியன்) மூன்றாவது இடத்திலும் உள்ளனா். மொத்தம் சுமாா் 100 கோடிக்கும் அதிகமான கணக்குகள் உள்ள இன்ஸ்டாகிராமில் 23 பேரின் கணக்குகள் மட்டுமே 100 மில்லியனுக்கும் அதிகமான நபா்களால் பின்தொடரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com