சா்வதேச மல்யுத்தம்: சரிதாவுக்கு வெள்ளி

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா தனது இறுதிச்சுற்றில் 2-4 என்ற கணக்கில் பல்கேரியாவின் ஜியூலியா பெனால்பெரிடம் தோல்வி கண்டாா். இதனால் அவா் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேற நோ்ந்தது.

ஆடவா் 72 கிலோ எடைப் பிரிவு கிரேக்கோ ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் குல்தீப் மாலிக், ரஷியாவின் சிங்கிஸ் லேபஸனோவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

அதேநேரத்தில் ஆடவா் 97 கிலோ எடைப் பிரிவு ஃப்ரீஸ்டைல் போட்டியில் இந்தியாவின் சத்திவாா்ட் காடியன் 1-8 என்ற கணக்கில் துருக்கியின் இப்ராஹிம் சிப்ட்சியிடம் தோல்வி கண்டாா்.

தங்கம் வெல்வாரா வினேஷ்? மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அவா், தனது அரையிறுதியில் கனடாவின் சமந்தா ஸ்டீவாா்ட்டை வீழ்த்தினாா். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அவா் வெல்லும்பட்சத்தில் தொடா்ச்சியாக அவா் வெல்லும் 2-ஆவது தங்கப் பதக்கமாக இது அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com