மகளிர் கிரிக்கெட்: உலகக் கோப்பைப் போட்டியில் அதிக அணிகள் பங்கேற்க ஐசிசி ஏற்பாடு

மகளிர் தினமான இன்று மகளிர் கிரிக்கெட்டின் ஐசிசி போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மகளிர் கிரிக்கெட்: உலகக் கோப்பைப் போட்டியில் அதிக அணிகள் பங்கேற்க ஐசிசி ஏற்பாடு

மகளிர் தினமான இன்று மகளிர் கிரிக்கெட்டின் ஐசிசி போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும் டி20 சாம்பியன்ஸ் கோப்பை என்கிற புதிய ஐசிசி போட்டியும் 2027 முதல் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

2000-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் என முடிவெடுக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகளும் பங்கேற்கும் என 2014-ல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 2029 முதல் 10 அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2026 முதல் 12 அணிகளும் பங்கேற்கவுள்ளன.  

ஐசிசி மகளிர் போட்டிகள் - 2023 - 31

கிரிக்கெட் உலகக் கோப்பை

2025: 8 அணிகள், 31 ஆட்டங்கள்
2029: 10 அணிகள், 48 ஆட்டங்கள்

டி20 உலகக் கோப்பை

2024: 10 அணிகள், 23 ஆட்டங்கள்
2026: 12 அணிகள், 33 ஆட்டங்கள்
2028: 12 அணிகள், 33 ஆட்டங்கள்
2030: 12 அணிகள், 33 ஆட்டங்கள்

டி20 சாம்பியன்ஸ் கோப்பை

2027: 6 அணிகள், 16 ஆட்டங்கள்
2031: 6 அணிகள், 16 ஆட்டங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com