2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. 
மந்தனா (கோப்புப் படம்)
மந்தனா (கோப்புப் படம்)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. 

கரோனா சூழலில் கடந்த ஓராண்டுக்குப் பிறகு இந்திய மகளிரணி சர்வதேசத் தொடரில் முதல்முதலாக விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

லக்னௌவில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. லாரா குட்ஆல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளையும் மன்சி ஜோஷி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதையடுத்து விளையாடிய இந்திய மகளிர் அணி இலக்கை எளிதாக விரட்டி வெற்றியடைந்தது. 28.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் பூனம் ராவுத் 62 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணியின் வெற்றியால் ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆகியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் மார்ச் 12 அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com