விஜய் ஹசாரே: இறுதிச்சுற்றில் மோதவுள்ள மும்பை & உத்தரப் பிரதேசம்

கேப்டன் பிரித்வி ஷா 122 பந்துகளில் 7 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 165 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பிரித்வி ஷா
பிரித்வி ஷா

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை, உத்தரப் பிரதேச அணிகள் மோதவுள்ளன.

தில்லியில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது உத்தரப் பிரதேசம். முதலில் விளையாடிய தில்லி அணி, 48.1 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. யாஷ் தயால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய உத்தரப் பிரதேச அணி, 42.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது. அக்‌ஷ்தீப் நாத் 71 ரன்கள் எடுத்தார்.

தில்லியில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகத்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. முதலில் விளையாடிய மும்பை அணி, 49.2 ஓவர்களில் 322 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் பிரித்வி ஷா 122 பந்துகளில் 7 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 165 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் 700 ரன்களுக்கும் அதிகமான ரன்களை எடுத்து மும்பை அணிக்குப் பெரிய பலமாக உள்ளார். இதன்பிறகு விளையாடிய கர்நாடகம் 42.4 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல், இன்று 64 ரன்களும் விக்கெட் கீப்பர் ஷரத் 61 ரன்களும் எடுத்தார்கள். 

தில்லியில் மார்ச் 14 அன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை, உத்தரப் பிரதேச அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com