முதல் டி-20: ஜேசன் ராய் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டி-20: ஜேசன் ராய் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் 5 ஆட்டகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளன. இந்த நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் துவக்க வீரர்கள் தவான்(4), ராகுல்(1) மற்றும் கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் இந்தியாவின் தொடக்க வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய பண்ட், ஸ்ரேயால் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

இருப்பினும், அதிக நேரம் தாக்கு பிடிக்காத பண்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த ஹர்திக் பாண்டியா சிறிது நேரத்தில் ஆர்ச்சர் பந்தில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தாகூர் டக் அவுட்டானார். கடைசி வரை நின்று ஆடிய ஸ்ரெயால் அரைசதம் கடந்து 67 ரன்களில் 20வது ஓவரில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. 

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பட்லர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் ரன்களிலும், பட்லர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மாலன் 24, பேர்ஸ்டோ 26 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com