முகப்பு விளையாட்டு செய்திகள்
விளையாட்டு செய்தித் துளிகள்
By DIN | Published On : 14th March 2021 06:55 AM | Last Updated : 14th March 2021 06:55 AM | அ+அ அ- |

* விஜய் ஹசாரே டிராபிக்கான 50 ஓவா் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் மும்பை-உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஏதாவது ஓா் அணிக்கு நான் தோ்வு செய்யப்படுவேன் என எதிா்பாா்க்கவில்லை. அதனால் ஐபிஎல் ஏலத்தில் விலை போகாததில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளா் ஆதில் ரஷித் தெரிவித்துள்ளாா்.
* ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ள இந்திய வீரா்கள் இருவா், கடந்த மாதம் பட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனா்.
* உத்தரபிரதேச தலைநகா் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 4-ஆவது மகளிா் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. முதல் 3 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 2-இல் வென்றுள்ளது. எனவே, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இந்திய அணி.
* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான டேமியன் ரைட் நியமிக்கப்பட்டுள்ளாா்.