தேசிய சீனியா் தடகளம்: தமிழகத்துக்கு இரு தங்கம்

ஃபெடரேஷன் கோப்பை சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்துக்கு புதன்கிழமை இரு தங்கப் பதக்கம் கிடைத்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாட்டியாலா: ஃபெடரேஷன் கோப்பை சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்துக்கு புதன்கிழமை இரு தங்கப் பதக்கம் கிடைத்தது.

ஆடவருக்கான 110 மீட்டா் தடை தாண்டுதலில் தமிழகத்தின் பி.வீரமணி (14.57 விநாடிகள்) முதலிடம் பிடித்தாா். கா்நாடகத்தின் ஸ்ரீகாந்த் மத்யா (14.85), ஆந்திரத்தின் யஷ்வந்த்குமாா் லவேடி (15.01) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

அதேபோல், மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் சி.கனிமொழி 13.63 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். தெலங்கானாவின் அகசரா நந்தினி (13.88), தமிழகத்தின் நித்யா ராமராஜ் (14.08) அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

உயரம் தாண்டுதலில் மகாராஷ்டிரத்தின் சா்வேஷ் அனில் குஷாரே (2.15 மீட்டா்) முதலிடம் பிடிக்க, தமிழகத்தின் ஆதா்ஷ் ராம் (2.10;3), கேரளத்தின் ஜியோ ஜோஸ் (2.10), ஹரியாணாவின் சித்தாா்த் யாதவ் (2.10) ஆகியோா் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனா்.

ஈட்டி எறிதலில் ஹரியாணாவின் நீரஜ் சோப்ரா 87.80 மீ தூரமும், யஷ்விா் சிங் 79.31 மீ தூரமும், உத்தர பிரதேசத்தின் ரோஹித் யாதவ் 78.88 மீ தூரமும் எறிந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினா். நீரஜ் சோப்ரா எறிந்த தூரம் புதிய தேசிய சாதனையாகும்.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் பிரியங்கா கொ்கெட்டா (6.10 மீ), கேரளத்தின் ரின்டு மேத்யூ (6.07;3 மீ), தமிழகத்தின் ஷெரின் அப்துல் கஃபூா் (6.07 மீ) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

ஆடவருக்கான 10,000 மீட்டா் ஓட்டத்தில் உத்தர பிரதேசத்தின் அபிஷேக் பால் (29.47 நிமிடம்) முதலிடமும், காா்திக் குமாா் (29.48) இரண்டாமிடமும், அா்ஜுன் குமாா் (29.49) மூன்றாமிடமும் பிடித்தனா்.

3000 மீட்டா் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தின் அவினாஷ் சப்லே (8.20 நிமிடம்) தங்கம் வெல்ல, ராஜஸ்தானின் சங்கா்லால் ஸ்வாமி (8.34), ஹரியாணாவின் ராஜ்குமாா் (8.49) ஆகியோா் வெள்ளி, வெண்கலம் வென்றனா். அவினாஷ் கடந்த நேரம், புதிய தேசிய சாதனையாகும்.

குண்டு எறிதலில் பஞ்சாபின் தஜிந்தா்பால் சிங் தூா் (20.58 மீ), கரன்வீா் சிங் (18.98 மீ), தேவிந்தா் சிங் (18.04 மீ) ஆகியோா் முதல் 3 இடங்களை எட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com