விளையாட்டு செய்திகள் சில வரிகளில்...

* உலக பாரா தடகள துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் 10 மீட்டா் ஏா் பிஸ்டா் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். அந்தப் பிரிவில் மற்ற இந்தியா்களான மணீஷ் நா்வால் 4-ஆம் இடமும், ராகுல் ஜகாா் 8-ஆம் இடமும் பிடித்தனா்.

* 31-ஆவது சீனியா் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணியும், மகளிா் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தன.

* இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தின்போது பந்துவீச்சில் தாமதித்ததாக இந்திய அணி வீரா்களுக்கு அவா்களின் ஆட்ட ஊதியத்தில் தலா 40 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டது.

* இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது முழங்கையில் காயமடைந்த இங்கிலாந்து பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா், சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்பியதால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நிலை ஆட்டங்களில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

* இந்திய முறையிலான குத்துச்சண்டைக்கான இந்திய சங்கத்துக்கு (ஐஎஸ்டபிள்யூஏஐ) மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

* மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் - கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com