அதிரடி ஆட்டத்தை தந்தைக்கு சமர்ப்பித்தார் கிருனாள் பாண்டியா

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அதிரடியாக அரைசதம் அடித்த கிருனாள் பாண்டியா, தனது ஆட்டத்தை மறைந்த தந்தைக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதிரடி ஆட்டத்தை தந்தைக்கு சமர்ப்பித்தார் கிருனாள் பாண்டியா


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அதிரடியாக அரைசதம் அடித்த கிருனாள் பாண்டியா, தனது ஆட்டத்தை மறைந்த தந்தைக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 205 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து கடைசி கட்ட அதிரடிக்கு ஆள் இல்லாமல் திணறியது.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு இணைந்த கேஎல் ராகுல், அறிமுக வீரர் கிருனாள் பாண்டியா அதிரடி ஆட்டம் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். குறிப்பாக கிருனாள் பாண்டியாவின் ஸ்டிரைக் ரேட் 160-ஐத் தாண்டி இருந்தது. 26-வது பந்திலேயே அரைசதத்தை எட்டிய கிருனாள் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் கேஎல் ராகுலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.

இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.

இதுபற்றி பேசிய கிருனாள், "இந்த ஆட்டம் எனது தந்தைக்கானது. ஆட்டத்துக்கான தொப்பியைப் பெறும்போதே உணர்ச்சிவயப்பட்டேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com