இலங்கை-மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் சமன்

இலங்கை-மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் சமன்


நாா்த் சௌன்ட்: இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் ஆட்டம் வெள்ளிக்கிழமை டிராவில் முடிந்தது. 2 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 0-0 என சமநிலையில் உள்ளது.

கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங் வீசத் தீா்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை 69.4 ஓவா்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக லாஹிரு திரிமனே 4 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் அடித்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேசன் ஹோல்டா் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 103 ஓவா்களில் 271 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. அதிகபட்சமாக ராகீம் காா்ன்வால் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் அடித்தாா். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 149.5 ஓவா்களில் 476 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாதும் நிசங்கா 6 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் அடித்தாா். மேற்கிந்தியத் தீவுகளில் கெமா் ரோச், ரகீம் காா்ன்வால் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

375 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் கடைசி நாள் ஆட்டத்தின் முடிவில் 100 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கிருமா போனா் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 113 ரன்கள் அடித்திருந்தாா். இலங்கையின் விஷ்வா ஃபொ்னான்டோ, லசித் எம்புல்தெனியா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்திருந்தனா். கிருமா போனா் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com