ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள்: இந்திய, இங்கிலாந்து வீரர்கள் புதிய சாதனை

ரிஷப் பந்த் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடி 11 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். 
ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள்: இந்திய, இங்கிலாந்து வீரர்கள் புதிய சாதனை

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்கள் இந்திய, இங்கிலாந்து வீரர்கள்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து இரு அணி வீரர்களும் சாதனை செய்துள்ளார்கள். 5 ஆட்டங்களுக்குக் குறைவான ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இதற்கு முன்பு 57 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 2018-2019-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணி வீரர்களும் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்கள். அந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 70 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு புதிய சாதனை. 37 சிக்ஸர்களை இங்கிலாந்து அணி வீரர்களும் 33 சிக்ஸர்களை இந்திய அணி வீரர்களும் அடித்துள்ளார்கள்.

இரு அணிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ். அவர் 14 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரிஷப் பந்த், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 11 சிக்ஸர்களும் பாண்டியா 8 சிக்ஸர்களும் அதிகமாக அடித்துள்ளார்கள். ரிஷப் பந்த் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடி 11 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார். 

அதிக சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ்
அதிக சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com