ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்: அசத்திய புவனேஸ்வர் குமார் & ஷர்துல் தாக்குர்!

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்: அசத்திய புவனேஸ்வர் குமார் & ஷர்துல் தாக்குர்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

விரைவாக ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்
விரைவாக ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்

அதிக ரன்கள்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதங்கள்  அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 பேர்ஸ்டோவ் 

  3 219 1 1  120.32 14
 கே.எல்.   ராகுல்   3 177 1 1 101.14 6
 ஷிகர் தவன்  3 169 0 2 94.41 2
 ரிஷப் பந்த்  2 155 0 2 151.96 11
  ஸ்டோக்ஸ் 3 135 0 1 132.35 11

அதிக விக்கெட்டுகள்

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 

 ஷர்துல்  

 3 7 4/67 6.72
 புவனேஸ்வர் 3 6 3/42 4.65
 பிரசித்   கிருஷ்ணா  3 6 4/54 6.91
 மார்க் வுட் 2 5 3/34 6.41
 ஸ்டோக்ஸ் 3 4 3/34 6.05

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com