டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும்: புவனேஸ்வர் குமார் விருப்பம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும்: புவனேஸ்வர் குமார் விருப்பம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பாகப் பந்துவீசிய புவனேஸ்வர் குமார் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டை மனத்தில் கொண்டுதான் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்குத் தயாரானேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியில் என்னுடைய பயிற்சியும் ஆட்டங்களில் தொடர்ச்சியாக விளையாடுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டை மனத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும். ஏனெனில் அடுத்து ஏராளமான டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நானும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். டெஸ்டில் விளையாடுவதற்காக என் தரப்பிலிருந்து எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 

இந்தத் தொடர் முழுக்க எனக்கு நன்றாக அமைந்துள்ளது. அடுத்த தொடர்களிலும் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன். 

கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட மனநிலையையும் தகுதிபடுத்திக்கொள்வது முக்கியம். கடினமான சூழலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம். இன்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர் சிறப்பாகப் பந்துவீசினார். பந்து ஸ்விங் ஆகாத தருணத்தில் பந்துவீச வந்தார். அவர் ஆட்டத்தின் சூழலை முழுமையாக மாற்றினார். விக்கெட்டுகளை எடுத்துத் தந்தார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com