இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள்: விராட் கோலி அதிருப்தி

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டதற்கு...
இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள்: விராட் கோலி அதிருப்தி


ஒருநாள் தொடரில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

எனினும் ஆட்ட நாயகன் விருது 95 ரன்கள் எடுத்த சாம் கரணுக்கும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டன. இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆட்ட நாயகன் விருது ஹர்துல் தாக்குருக்கு வழங்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கிறது. நான்கு விக்கெட்டுகள் எடுத்து பேட்டிங்கில் 30 ரன்களும் எடுத்தார். அதேபோல தொடர் நாயகன் விருதுக்கான போட்டியிலும் புவனேஸ்வர் குமார் இருந்துள்ளார். ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - இதுபோன்ற பேட்டிங் ஆடுகளத்தில் 6 ரன்களுக்குள் இருந்தது. ஆரம்ப ஓவர்களிலும் நடு ஓவர்களிலும் இவர்கள் தான் இரு அணிகளுக்கிடையேயான வித்தியாசங்களாக இருந்தார்கள். இருவரும் பிரமாதமாக விளையாடினார்கள். தொடர் வெற்றிக்கு அவர்கள் இருவரும் முக்கியக் காரணம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com