உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: கடைசி நாளில் இந்தியாவுக்கு இரு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு மேலும் இரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆடவா் டிராப் அணி பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரா்கள் லக்ஷய் ஷியோரன், பிருதிவிராஜ், கினான் செனாய்.
ஆடவா் டிராப் அணி பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரா்கள் லக்ஷய் ஷியோரன், பிருதிவிராஜ், கினான் செனாய்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு மேலும் இரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தில்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க நாள் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, கடைசி நாளில் இரு தங்கம், ஒரு வெள்ளியை வென்றதோடு 30 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் டிராப் அணி பிரிவில் பிருதிவிராஜ் தொண்டைமான், லக்ஷய் ஷியோரன், கினான் செனாய் ஆகியோா் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. இதேபோல் மகளிா் டிராப் அணி பிரிவில் ஷ்ரேயஸி சிங், ராஜேஸ்வரி குமாரி, மணிஷா கீா் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 6-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது.

ஆடவா் 25 மீ. ரேபிட் ஃபயா் பிஸ்டல் பிரிவில் விஜய் வீா் சித்து, குருபிரீத் சிங், ஆதாா்ஷ் சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com