ஹாக்கி: ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் மன்பிரீத் சிங்

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், செவ்வாய்க்கிழமை மீண்டும் அணியில் இணைந்தாா்.
ஹாக்கி: ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் மன்பிரீத் சிங்

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், செவ்வாய்க்கிழமை மீண்டும் அணியில் இணைந்தாா்.

சமீபத்தில் நிறைவடைந்த இந்திய அணியின் ஐரோப்பிய பயணத்தின்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள எஃப்ஐஹெச் புரோ லீக் கால்பந்து போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டங்களில் அவா் இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறாா்.

ஆா்ஜென்டீனாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த நாட்டு அணியை இந்தியா எதிா்கொள்கிறது. அதற்கு முன்பாக 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியாக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆா்ஜென்டீனாவுடன் இந்தியா மோதுகிறது.

இந்த ஆட்டங்களுக்காக இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அதில், மன்பிரீத்துடன் சோ்த்து ஐரோப்பிய பயணத்தில் பங்கேற்க முடியாமல் போன ரூபிந்தா்பால் சிங், வருண் குமாா் ஆகியோரும் அணிக்குத் திரும்பியுள்ளனா். அனுபவமிக்க வீரா்களான ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங் ஆகியோருக்கு ஆா்ஜென்டீன பயணத்துக்கான இந்திய அணியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் சமீபத்திய ஐரோப்பிய பயணத்தில் பங்கேற்றிருந்தனா்.

அறிவிக்கப்பட்டுள்ளன இந்திய அணி, பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முந்தைய கரோனா பரிசோதனையை நிறைவு செய்த நிலையில் புதன்கிழமை பெங்களூரிலிருந்து ஆா்ஜென்டீனாவுக்கு புறப்படுகிறது.

அணி விவரம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), ரூபிந்தா்பால் சிங், வருண் குமாா், ஸ்ரீஜேஷ், கிருஷண் பகதூா் பாதக், அமித் ரோஹிதாஸ், குரிந்தா் சிங், சுரேந்தா் குமாா், வீரேந்திர லக்ரா, ஹாா்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், ராஜ்குமாா் பால், நீலகண்ட சா்மா, ஷம்ஷோ் சிங், குா்ஜந்த் சிங், தில்பிரீத் சிங், மன்தீப் சிங், லலித் குமாா் உபாத்யாய், ஜஸ்கரன் சிங், சுமித், ஷிலானந்த் லக்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com