மகளிா் டி20: ஆஸி.யை வீழ்த்தியது நியூஸி.

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிரணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து மகளிரணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்றதை அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமநிலையில் உள்ளது.

நேப்பியரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் விளாச, அடுத்து ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் அடித்து வென்றது.

ஆஸ்திரேலிய தரப்பில் பேட்டிங்கில் பெத் மூனி 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். பௌலிங்கில் அந்த அணியின் மீகன் ஷட் 2 விக்கெட் சாய்த்தாா். நியூஸிலாந்த் பேட்டிங்கில் பிரான்சஸ் மெக்கே 46 ரன்கள் அடிக்க, பௌலிங்கிலும் அவரே 2 விக்கெட் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com