2-வது டெஸ்ட்: மே.இ. தீவுகள் அணி 354, இலங்கை 136/3 (விடியோ)

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 2-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
அரை சதமெடுத்த திரிமனே
அரை சதமெடுத்த திரிமனே

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 2-ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2-வது டெஸ்ட், நார்த் சவுண்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 185 ரன்களுக்கு முதல் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மே.இ. தீவுகள் அணி. லக்மல் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டனும் தொடக்க வீரருமான பிராத்வெயிட்டும் கார்ன்வாலும் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து முதல் நாளின் கடைசிப் பகுதியில் சிறப்பாக விளையாடினார்கள். கார்ன்வால் விரைவாக ரன்கள் சேர்த்தார். அவர் 54 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

முதல் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 86 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த பிராத்வெயிட் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்நிலையில் 2-ம் நாளில் மே.இ. தீவுகள் அணி 111.1 ஓவர்களில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராத்வெயிட் கடைசி வீரராக 126 ரன்களில் ஆட்டமிழந்தார். கார்ன்வால் 73 ரன்கள் எடுத்து லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணித் தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதன்பிறகு விளையாடிய இலங்கை அணி, 2-ம் நாள் முடிவில் 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் சண்டிமல் 34 ரன்களும் தனஞ்ஜெயா டி சில்வா 23 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள். திரிமனே 55 ரன்களில் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 218 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com