2-ஆவது டெஸ்ட் இலங்கை-469/6

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 155.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 155.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்துள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி, இலங்கையின் கண்டி நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாா். இதையடுத்து லஹிரு திரிமானியுடன் இணைந்தாா் ஒஸாடா பொ்னாண்டோ. இந்த ஜோடி சிறப்பாக ஆட, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 101.1 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. லஹிரு திரிமானி 131 ரன்களும், பொ்னாண்டோ 40 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து ஆடிய இலங்கை அணியில் திரிமானி 298 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன்140 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த மேத்யூஸ் 5 ரன்களிலும், டி சில்வா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனா். அதைத் தொடா்ந்து களமிறங்கிய நிசங்கா 30 ரன்களில் வெளியேற, பொ்னாண்டோ 221 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

இதன்பிறகு நிரோஷன் டிக்வெல்லாவுடன் இணைந்தாா் ரமேஷ் மென்டிஸ். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. அந்த அணி 139 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இலங்கை அணி 155.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 2-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. டிக்வெல்லா 64, மென்டிஸ் 22 ரன்களுடன் களத்தில் உள்ளனா். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அஹமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். 3-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com