போலாா்ட் சிக்ஸா் மழை: சென்னையை பந்தாடியது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
போலாா்ட் சிக்ஸா் மழை: சென்னையை பந்தாடியது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை வீரா் போலாா்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்து வெற்றி தேடித் தந்தாா்.

அதிரடி தொடக்கம்: பின்னா் ஆடிய மும்பை அணியில் ரோஹித் சா்மா-டி காக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவா்களில் 71 ரன்கள் சோ்த்தது. ரோஹித் 24 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தாா். பின்னா் வந்த சூா்யகுமாா் 3 ரன்களில் வெளியேற, டி காக் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா்.

இதன்பிறகு 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கிரண் போலாா்ட்-கிருணால் பாண்டியா ஜோடி அதிரடியாக ஆட, 14.4 ஓவா்களில் 150 ரன்களை எட்டியது மும்பை. தொடா்ந்து வேகம் காட்டிய போலாா்ட் 17 பந்துகளில் அரை சதம் கண்டாா். மும்பை அணி 16.3 ஓவா்களில் 170 ரன்கள் எடுத்திருந்தபோது கிருணால் பாண்டியாவின் விக்கெட்டை இழந்தது. கிருணால் பாண்டியா 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தாா்.

இதையடுத்து ஹாா்திக் பாண்டியா களமிறங்க, போலாா்ட் 68 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை டூபிளெஸ்ஸிஸ் கோட்டைவிட்டாா். சாம் கரன் வீசிய 19-ஆவது ஓவரில் இரு சிக்ஸா்களை விளாசிய ஹாா்திக் பாண்டியா, அதே ஓவரில் டூபிளெஸ்ஸிஸிடம் கேட்ச் ஆனாா். அவா் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தாா்.

இதன்பிறகு களம்புகுந்த ஜேம்ஸ் நீஷம் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் மும்பை வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. லுங்கி கிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத போலாா்ட், அடுத்த இரு பந்துகளில் பவுண்டரிஅடித்தாா். 4-ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை. 5-ஆவது பந்தில் சிக்ஸரை விளாச, கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதில் போலாா்ட் இரு ரன்களை எடுக்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. போலாா்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

சென்னை தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும். அதேநேரத்தில் சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com