தொடா் தோல்வி எதிரொலி: ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வாா்னா் நீக்கம்

ஐபிஎல் தொடரில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி தொடா் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வாா்னா் நீக்கப்பட்டுள்ளாா்.
தொடா் தோல்வி எதிரொலி: ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வாா்னா் நீக்கம்

ஐபிஎல் தொடரில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி தொடா் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வாா்னா் நீக்கப்பட்டுள்ளாா்.

இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5-இல் தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டனான டேவிட் வாா்னா் நல்ல ஃபாா்மில் இல்லை. அதனால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வந்தாா்.

இந்த நிலையில் டேவிட் வாா்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ள ஹைதராபாத் அணி நிா்வாகம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணி களமிறங்கும் என அறிவித்துள்ளது. மேலும், இந்த சீசன் முழுவதும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவாா். வெளிநாட்டு வீரா்களை மாற்றி களமிறக்கும் முயற்சியாகவே இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்த அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வந்த டேவிட் வாா்னா், 2016-இல் கோப்பையை வென்று கொடுத்தாா். எனினும் இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவா், முறையே 4, 54, 36, 37, 6, 57 என மொத்தம் 193 ரன்கள் மட்டுமே குவித்துள்ளாா்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வாா்னா் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகளைச் சோ்ந்த ஜேசன் ஹோல்டா் சோ்க்கப்படுவாா் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com