கண்டி டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் வங்கதேசம்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தோல்வியை தவிா்ப்பதற்காக வங்கதேசம் போராடி வருகிறது.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தோல்வியை தவிா்ப்பதற்காக வங்கதேசம் போராடி வருகிறது.

இலங்கை நிா்ணயித்துள்ள 437 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் அந்த அணி, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 48 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்துள்ளது.

கடைசி நாளான திங்கள்கிழமை 5 விக்கெட்டுகளைக் கொண்டு 260 ரன்களை ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது வங்கதேசம். அது கடினம் என்பதால், விக்கெட்டுகளை இழக்காமல் டெஸ்ட்டை டிரா செய்வதற்கு அந்த அணி முயற்சிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 251 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை, 2-ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

இதையடுத்து 437 என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com