வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை 209 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. 
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை


கண்டி: வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை 209 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. 
2 டெஸ்டுகளைக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2-ஆவது டெஸ்டில் வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது. 
கடந்த 29-ஆம் தேதி கண்டியில் தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக லாஹிரு திரிமனே 15 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசியிருந்தார். வங்கதேச தரப்பில் டஸ்கின் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 
பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய வங்கதேசம் 83 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 12 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் அடித்தார். இலங்கை பெளலர்களில் அபாரமாக பந்துவீசிய பிரவீண் ஜெயவிக்ரமா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை, 42.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்து 2-ஆவது இன்னிங்ûஸ டிக்ளேர் செய்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் எடுத்தார். 
இறுதியாக 437 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய வங்கதேசம், கடைசி நாளான திங்கள்கிழமை 71 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷ்ஃபிகர் ரஹிம் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் பிரவீண் ஜெயவிக்ரமா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com