பிரெஞ்சு ஓபன்: தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா வெற்றி

பிரெஞ்சு ஓபன் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெற்றி பெற்றுள்ளார். 
பிரெஞ்சு ஓபன்: தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா வெற்றி

பிரெஞ்சு ஓபன் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெற்றி பெற்றுள்ளார். 

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது. 

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா ரெய்னா என நான்கு இந்தியர்கள் பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.

சுமித் நாகல் இத்தாலியின் ராபர்டோவுக்கு எதிராகவும் பிரஜ்னேஷ் ஜெர்மனியின் ஆஸ்கருக்கு எதிராகவும் ராம்குமார் அமெரிக்காவின் மைக்கேலுக்கு எதிராகவும் அங்கிதா ரெய்னா ஆஸ்திரேலியாவின் அரினாவுக்கு எதிராகவும் மோதுகிறார்கள். அங்கிதா இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றுக்கும் தகுதிபெற்றதில்லை. 

இன்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அரினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-6, 6-1, 6-4 என்கிற செட் கணக்கில் வென்றுள்ளார் அங்கிதா. 

நாளை நடைபெறும் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் நாட்டின் கிரீட் மின்னன்னை எதிர்கொள்கிறார் அங்கிதா. தரவரிசையில் கிரீட் 125-வது இடத்திலும் அங்கிதா 182-வது இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com