இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது: நியூசி. முன்னாள் வீரர் பாராட்டு

36 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடிய விதம் அற்புதமானது.
இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது: நியூசி. முன்னாள் வீரர் பாராட்டு

இந்திய அணி சிறப்பாக விளையாடுவதால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது என நியூசி. முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹேட்லி பாராட்டு தெரிவித்துள்ளார். 

சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பங்களிப்பு பற்றி நியூசி. முன்னாள் வீரர் ரிச்சர்ட் ஹேட்லி கூறியதாவது:

இந்திய அணி கிரிக்கெட்டுக்கு ஏராளமான வருமானத்தைக் கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறாக இருக்கும். எனவே கிரிக்கெட்டுக்கு இந்தியா தேவை. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பைத் தந்துள்ளது. 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடிய விதம் அற்புதமானது. தோல்வியிலிருந்து மீண்டு வந்தார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் மீண்டும் வந்தது. நிறைய இளைஞர்கள் இந்திய அணிக்குத் தேர்வாகி நன்றாக விளையாடினார்கள். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் எனச் சொல்வது கடினம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com