ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்: நியூசி. பந்துவீச்சுப் பயிற்சியாளர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் எனப் பார்த்தோம்...
ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்: நியூசி. பந்துவீச்சுப் பயிற்சியாளர்

இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்த வேண்டும் என்றால் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என நியூசிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் ஜுர்கென்சன் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள செளதாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார். இரு தொடர்களையும் இந்திய அணி வெல்ல அவருடைய பங்களிப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதனால் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தான் முதல் தேர்வாக உள்ளார். 

இந்நிலையில் ரிஷப் பந்தின் பேட்டிங் பற்றி நியூசிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் ஜுர்கென்சன் கூறியதாவது:

தனது மனவலிமை மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய ஆபத்தான வீரர், ரிஷப் பந்த். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் எனப் பார்த்தோம். நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். அதேசமயம் அது விக்கெட் எடுக்கும் வாய்ப்பையும் எங்களுக்குத் தரும். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி ரிஷப் பந்த் ரன்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் இயல்பாக ஆடக்கூடியவர். அவரைத் தடுத்து நிறுத்துவது கடினம் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com