உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டம் டிரா ஆனால் யார் வெற்றியாளர்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டம் டிரா ஆனால் யார் வெற்றியாளர்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

* இறுதி ஆட்டம் டிரா அல்லது டை ஆனால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

* 5 நாள்களைத் தாண்டி கூடுதலாக ஒரு நாள் இந்த டெஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள்களில் மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைபட்டால், இழந்த நேரங்களை ஐந்து நாள்களுக்குள் முடிக்காவிட்டால், கூடுதல் நாள் பயன்படுத்தப்படும். மற்றபடி ஐந்து நாள்களிலும் முடிவு எட்டப்படாவிட்டால், முடிவுக்காக கூடுதல் நாளைப் பயன்படுத்த முடியாது. கூடுதல் நாளைப் பயன்படுத்துவது தொடர்பாகக் கடைசி நாளின் கடைசி ஒரு மணி நேரத்தின்போது நடுவர் அறிவிப்பார். 

* ஆட்டத்தில் கிரேட் 1 டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com