ஐபிஎல் 2-ம் பாதியில் பொல்லார்ட், கெயில், பிராவோ பங்கேற்பதில் சிக்கல்?

ஐபிஎல் 2-ம் பாதியில் வீரர்களின் பாதுகாப்பு வளையம் காரணமாக கரிபியன் பிரிமீயர் லீக்கை (சிபிஎல்) முன்கூட்டியே தொடங்கக் கோரி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வரு
ஐபிஎல் 2-ம் பாதியில் பொல்லார்ட், கெயில், பிராவோ பங்கேற்பதில் சிக்கல்?


ஐபிஎல் 2-ம் பாதியில் வீரர்களின் பாதுகாப்பு வளையம் காரணமாக கரிபியன் பிரிமீயர் லீக்கை (சிபிஎல்) முன்கூட்டியே தொடங்கக் கோரி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2-ம் பகுதி செப்டம்பர், அக்டோபரில் நடத்த பிசிசிஐ சனிக்கிழமை அனுமதியளித்தது. செப்டம்பர் 15-அக்டோபர் 15 இடையே மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதனிடையே, ஆகஸ்ட் 28-ம் தேதி சிபிஎல் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கிறது. இதனால், சிபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தக் கோரி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது:

"மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சிபிஎல்-ஐ முன்கூட்டியே முடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி முன்கூட்டியே நடத்தும்பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து ஐபிஎல் பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்."  

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், முக்கிய வீரர்கள் சிலர் மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களின் முதல் சில ஆட்டங்களில் பங்கேற்க முடியாமல் போகலாம். 

கைரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெயில் (பஞ்சாப் கிங்ஸ்), டுவைன் பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஷிம்ரோன் ஹெத்மயர் (டெல்லி கேபிடல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), நிகோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டோரால் முதல் சில ஆட்டங்களில் விளையாட முடியாது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் சிபிஎல்-இல் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com