கரோனா பாதிப்பு: மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மில்கா சிங்

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்...
கரோனா பாதிப்பு: மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மில்கா சிங்

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், கோரிக்கையின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். 400 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் ஓடி முடிந்த அவருடைய தேசிய சாதனை 38 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்து நாள்களுக்கு முன்பு மில்கா சிங், கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கரோனா பாதிப்பு குறையாததால் மொஹலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் குடும்பத்தினரின் கோரிக்கை அடிப்படையில் மில்கா சிங், தற்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சீரான நிலைமையில் உள்ள மில்கா சிங், வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மில்கா சிங்கின் மனைவில் நிர்மல், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை சார்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com