ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸி. வீரர்கள் விளையாடுவார்களா?: கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதில்

ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸி. வீரர்கள் விளையாடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. 
ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸி. வீரர்கள் விளையாடுவார்களா?: கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதில்

ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸி. வீரர்கள் விளையாடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. 

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

ஐபிஎல் 2021 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொள்வது பற்றி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது:

அனைவரும் மீண்டும் ஒன்று கூடிய பிறகு ஐபிஎல் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வது பற்றி விவாதிக்கப்படும். மாலத்தீவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆஸி. வீரர்கள் இன்றுதான் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் முதலில் குடும்பத்துடன் இணைய வேண்டும். அதற்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்துக்குத் தயாராக வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com